மயங்கி விழுந்து தொழிலாளி சாவு
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மேநல்லூர் கிராமத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு ஒடிசா மாநிலம், பூரி மாவட்டம் பெங்காலி கிராமத்தை சேர்ந்த ரகுநாத் மாஜி (வயது 33) என்பவர் தனது மனைவி, மாமியார், மாமனாருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று ரகுநாத் மாஜியின் மாமனார் ரவிந்தா சுந்தராவுக்கு (55) வலிப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ரகுநாத் மாஜி கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.