விபத்தில் தொழிலாளி பலி
திருமங்கலம் அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்கள்.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள பள்ளக்காபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சிலம்பரசன் (வயது 24). சுமை தூக்கும் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் திருமங்கலத்தில் இருந்து செக்கானூரணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். சோழவந்தான் ரோடு பகுதியில் சென்ற போது பனைமரம் நிறுத்தம் அருகே இருந்த வேகத்தடையில் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.