விபத்தில் தொழிலாளி பலி
ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்தில் தொழிலாளி பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்துப்பட்டி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 28). நெசவுத்தொழிலாளி. இவரது மனைவி பாலாம்பிகா. இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு காட்டழகர் கோவிலுக்கு சென்றனர். அப்போது செண்பகத்தோப்பு ரோட்டில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விழுந்ததில் மாரிமுத்து படுகாயம் அடைந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மனைவி கண் முன் கணவர் இறந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து பாலாம்பிகை கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.