விபத்தில் தொழிலாளி பலி

மூங்கில்துறைப்பட்டு அருகே நடந்த விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-02-02 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே ஈருடையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஈசாக் (வயது 43) கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் பொரசப்பட்டு அருகில் உள்ள முனியப்பன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு எதிரே நடந்து வந்தவர் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஈசாக் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்