விபத்தில் தொழிலாளி பலி

திசையன்விளை அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.

Update: 2023-01-07 20:35 GMT

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள கோட்டைகருங்குளத்தை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 50). கூலித்தொழிலாளியான இவர் நேற்று கோட்டைகருங்குளம் மெயின்ரோட்டில் சைக்கிளில் சென்று கொன்டிருந்தார். அவர் ரோட்டை கடக்க முயன்றபோது அந்த வழியான கோழிகளை ஏற்றி சென்ற லோடு ஆட்டோ, சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இசக்கியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்