நிலக்கோட்டை அருகே மினி வேன் மோதி தொழிலாளி பலி
நிலக்கோட்டை அருகே மினி வேன் மோதி சைக்கிளில் சென்ற தொழிலாளி பலியானார்.
நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் முனியசாமி (வயது 58). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் மில்லுக்கு சொந்தமான வேன் ஒன்று முனியசாமி மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த விளாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் முனியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.