மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
டி.கல்லுப்பட்டியில் மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
பேரையூர்,
உத்தரபிரதேசம் பசார் பஸ்தியை சேர்ந்தவர் ராம்நாத் (வயது 45). இவர் டி.கல்லுப்பட்டி-எம்.சுப்புலாபுரம் சாலையில் உள்ள தனியார் ஸ்டீல்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று இரவு கம்பெனி மாடியில் படுத்து தூங்கியுள்ளார்.அப்போது தூக்க கலக்கத்தில் மாடியில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.செல்லும் வழியிலேயே ராம்நாத் இறந்தார். இதுகுறித்து காடனேரி கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன், டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.