கூடலூர் -நடுவட்டம் இடையே தேசிய நெடுஞ்சாலையை புதுப்பிக்கும் பணி தொடக்கம்
கூடலூர் -நடுவட்டம் இடையே தேசிய நெடுஞ்சாலையை புதுப்பிக்கும் பணி தொடக்கம்
கூடலூர்
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. மேலும் கர்நாடகா- கேரளாவில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் இச்சாலையில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் கூடலூரில் இருந்து நடுவட்டம் வரையில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
இதனால் சீசன் காலங்களில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் கூடலூர், பந்தலூர் தாலுகா வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதேபோல் அவசர காலங்களில் நோயாளிகள், கர்ப்பிணிகளை ஆம்புலன்ஸ் வாகனங்களில் கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. சில சமயங்களில் உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் நடுவழியில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் ஏற்பட்டு வந்தது.
இதனால் கூடலூரில் இருந்து நடுவட்டம் வரையிலான பழுதடைந்த சாலையை சீரமைக்க அல்லது புதுப்பிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக பயண நேரம் அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் நடுவட்டத்தில் இருந்து கூடலூர் வரையில் பழுதடைந்து கிடக்கும் தேசிய நெடுஞ்சாலையை புதுப்பிக்கும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.