பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள் அகற்றும் பணி தொடக்கம்

பொள்ளாச்சி நகராட்சிபகுதியில் போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள் அகற்றும் பணி தொடங்கியது.

Update: 2022-09-11 16:34 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சிபகுதியில் போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள் அகற்றும் பணி தொடங்கியது.

என் குப்பை என் பொறுப்பு

பொள்ளாச்சியில் சுகாதார சீர்கேட்டை போக்க என் குப்பை என் பொறுப்பு திட்டத்தில் சுவரொட்டிகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் சார்பில், என் குப்பை என் பொறுப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் சுகாதார பணி மேற் கொள்ளப்படுகிறது. இதில், ஒரு பகுதியாகநகரின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே ஒட்டப்பட்ட சுவரொட்டி மற்றும் பிளக்ஸ் பேனர்களை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில், நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்கள் என பலரும் நகரில் ஒட்டப்பட்ட சினிமா, அரசியல், தனியார் விளம்பர போஸ்டர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குப்பை இல்லாத மாநிலம்

இதுகுறித்து, நகராட்சிதலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கூறுகையில், 'தமிழகத்தில் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் குப்பைகளை அகற்றி, குப்பை இல்லாத மாநிலமாக மாற்ற, என் குப்பை என் பொறுப்பு என்ற அடிப்படையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் மாநகராட்சி, ஊராட்சி நிர்வாகம் செயல்பட வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அபராதம் விதிக்கப்படும்

அதன் அடிப்படையில், மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை படி, என் குப்பை என்பொறுப்பு என்ற அடிப்படையில், குப்பை இல்லாத நகராட்சியாக பொள்ளாச்சியை மாற்ற வியாபாரிகள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். பொள்ளாச்சி நகராட்சியை குப்பை இல்லாத நகராட்சியாக மாற்ற பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதுபோஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள் அகற்றும் பணி நடைபெறுகிறது. விதிமுறையை மீறி நகராட்சி பகுதியில் பிளக்ஸ்பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது அபராதம் விதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்