பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானை தயாரிக்கும் பணி தீவிரம்

பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானை தயாரிக்கும் பணி தீவிரம்

Update: 2023-01-08 18:45 GMT

பொங்கல் பண்டிைகயையொட்டி நாகூர் குயவர் தெருவில் மண்பானை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வீடுகளில் வர்ணம் பூசப்பட்டு ெபாருட்கள் சுத்தம் செய்யப்படும். பொங்கல் பண்டிகை நாளில் புதிய பானையில் பொங்கல் வைத்து சூரியபகவானுக்கு கரும்பு உள்ளிட்ட பொருட்களை படையலிட்டு நன்றி செலுத்துவார்கள். அதன்படி பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் பொதுமக்கள் மண் பானைகள், அடுப்புகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருகின்றனர்.

மண்பானை தயாரிக்கும் பணி தீவிரம்

இந்தநிலையில் நாகூர் குயவர் தெருவில் வசிக்கும் சண்முகம் என்பவர் பல ஆண்டுகளாக பொங்கல் மண்பானை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இங்கு தயார் செய்யும் மண் பானைகள் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, கீழையூர், பறவை ஆகிய பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. நாகூர் குயவர் தெருவில் தயார் செய்யப்படும் மண்பானைகள் தரமானதாக இருப்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்த மண்பானை ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்