அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் புதிய தேர் செய்யும் பணி தீவிரம்

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் புதிய தேர் செய்யும் பணி தீவிரம்

Update: 2023-02-11 18:45 GMT

மேல்மலையனூர்

மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப்பெருவிழா வருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 7-ம் நாள் திருவிழாவான தேரோட்டம் 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதற்காக புதியதாக தேர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

ஆண்டு தோறும் பனை, வாகை, புளி, காட்டு வாகை உள்ளிட்ட மரங்களைக் கொண்டு புதியதாக தேர் செய்து விழா கொண்டாடுவது வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டும் மேற்படி வகை மரங்களை கொண்டு தேர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் ஒப்பந்ததாரரிடம் இப்பணிகளை தரமானதாகவும், குறிப்பிட்ட காலகெடுவுக்குள் முடிக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்