பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில்ரூ.83¾ லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணிஅமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்
பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில் ரூ.83¾ லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே பெருவளூர் கிராமத்தில் பழமைவாய்ந்த கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ கோட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு புதிதாக தேர் வேண்டும் என அப்பகுதி மக்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதையடுத்து அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து தேர் செய்வதற்கு ரூ.83 லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், புதிய தேர் செய்வதற்கான பணி நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், உதவி ஆணையர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பு விழுப்புரம் மாவட்ட தலைவர் பாபு வரவேற்றார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய தேர் செய்வதற்கான பணியை தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் செல்வி ராமசரவணன், சாந்தி சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பெருவளூர் கந்தவேல், கெங்கபுரம் ராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் பெருமாள், ரவிச்சந்திரன், சியாமளா ஜெய்சங்கர், கோவில் மேலாளர் மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.