திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நிறைவு

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் பார்வையிட விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

Update: 2023-01-16 16:15 GMT

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் பார்வையிட விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

சுற்றுலா தலம்

சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிடுவது வழக்கம். இந்த சிலை கடல் உப்பு காற்றினால் சேதமடைவதை தடுக்க 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.

அதன்படி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி ரூ.1 கோடி செலவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது.

ரசாயன கலவை

அதன் பிறகு காகித கூழ் கலவை சிலை மீது ஒட்டப்பட்டு சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் பணி நடந்தது. தொடர்ந்து ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 'வாக்கர்' எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது. தற்போது ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்துள்ளது. இதையடுத்து திருவள்ளுவர் சிலை புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இதையடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்