வேகத்தடைகள் அமைக்கும் பணி தீவிரம்

ஊட்டி-மஞ்சூர் சாலையில் விபத்துகளை தவிர்க்க வேகத்தடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன.

Update: 2022-08-18 14:31 GMT

ஊட்டி, 

ஊட்டி-மஞ்சூர் சாலையில் விபத்துகளை தவிர்க்க வேகத்தடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன.

சாலை விபத்துகள்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்காக உள்ளது. மேலும் செங்குத்தாகவும், வளைந்து, நெளிந்தும், குறுகிய சாலைகளாக இருக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. சாலை விபத்துகளை தவிர்க்க மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு முன்னேற்ற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக சாலையோரங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் விபத்துகள் ஏற்பட்டாலும், வாகனங்கள் சாலைகளை விட்டு வெளியே செல்லாமலும், பள்ளத்தில் விழாமலும் தடுக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்புகின்றனர்.

வேகத்தடைகள்

இதற்கிடையே நீலகிரியில் விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து, விபத்துகளை தவிர்ப்பதற்காக கலெக்டருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து வேகத்தடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஊட்டி-மஞ்சூர் சாலையில் 8 இடங்கள், அவலாஞ்சி சாலையில் 4 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும்போது, வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காக தொடர்ந்து விபத்துகள் நடக்கும் இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது அமைக்கப்படும் வேகத்தடைகளில் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் இருக்கும். ஊட்டி-மஞ்சூர் சாலையில் ரூ.10 லட்சம் செலவில் சவுக்கு மரம், லாரன்ஸ் பள்ளி, முத்தோரை, எமரால்டில் தலா 2 இடங்களிலும், அவலாஞ்சி சாலையில் 4 இடங்களிலும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வருகிறது என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்