மகளிர் குழு பெண்களை 3 மணி நேரம் காக்க வைத்த அதிகாரிகள் மதிய உணவுகூட வழங்காததால் அதிருப்தி
மகளிர் குழு பெண்களை 3 மணி நேரம் அதிகாரிகள் காக்க வைத்த நிலையில் மதிய உணவுகூட வழங்காததால் பெண்கள் அதிருப்தியடைந்தனர்.
சோளிங்கர்
மகளிர் குழு பெண்களை 3 மணி நேரம் அதிகாரிகள் காக்க வைத்த நிலையில் மதிய உணவுகூட வழங்காததால் பெண்கள் அதிருப்தியடைந்தனர்.
சோளிங்கரில் வருவாய் துறை சார்பில் என் வாக்கு என் உரிமை, தேர்தலில் வாக்களித்தல் குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ரங்கோலி போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நகராட்சியில் இருந்து 5 மகளிர் குழுவை சேர்ந்த பெண்களும், ஊராட்சிகளில் இருந்து 10 மகளிர் குழுவை சேர்ந்த பெண்கம் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு காலை 10.30 மணிக்கு கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வரவில்லை. இதனால் மகளிர் குழு பெண்கள். சுமார் 3 மணிநேரம் வெயிலில் காத்திருந்தனர்.
இந்த நிலையில் மதியம் 1.30 மணியளவில் தாசில்தார் கணேசன் தலைமையில் விழா நடைபெற்றது. அதிகாரிகளின் அலங்காரத்தால் மகளிர் குழு பெண்கள் 3 மணிநேரம் அவதிப்பட்டனர். மதிய உணவு கூட வழங்கப்படாததால் அவர்கள் அதிருப்தியடைந்தனர்.