விருதுநகர் பாண்டியன் அண்ணாநகரை சேர்ந்தவர் குருவம்மாள் (வயது55). மின்வாரிய அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். அப்பகுதியில் கஸ்தூரிபாய் நகரில் வசிப்பவர் பெரிய கருப்பன் (78). குருவம்மாளின் கணவரின் சகோதரரான பெரிய கருப்பனுக்கும், குருவம்மாளின் கணவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த குருவம்மாளை, பெரிய கருப்பன் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி குருவம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பெரியகருப்பன் மீது விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.