சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள மயிலாடும்துறை கிராமத்தை சேர்ந்தவர் பேச்சியப்பன் (வயது 34). இவருக்கும் இவரது மனைவி ரேவதிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ரேவதி தனது வீட்டின் அருகில் உள்ள முத்துமாரி (29) என்ற பெண்ணின் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு சென்ற பேச்சியப்பன், தனது மனைவியை வெளியே அனுப்பும்படி முத்துமாரியிடம் கூறி தகராறு செய்துள்ளார். பின்னர் ஆத்திரத்தில் முத்துமாரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் பேச்சியப்பனை கைது செய்தனர்.