பெண்ணை தாக்கியவர் கைது

மானூர் அருகே பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-30 19:58 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள சுப்பையாபுரத்தைச் சேர்ந்தவர் காந்திமதி (வயது 55). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சம்பவத்தன்று காந்திமதி தனது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த முருகன் (57) மதுபோதையில் அவரை கிண்டல் செய்துள்ளார். இதை காந்திமதி தட்டிக்கேட்கவே, அவரை முருகன் அவதூறாக பேசி, கையில் கடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த காந்திமதி சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து, முருகனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்