நாமக்கல்லில் தன்னை கடித்த பாம்பை மருத்துவமனைக்கு எடுத்துசென்ற பெண்
நாமக்கல்லில் பெண் ஒருவர் தன்னை கடித்த பாம்பை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பெண் ஒருவர் தன்னை கடித்த பாம்பை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
முள்ளுக்குறுச்சி பகுதியை சேர்ந்த ரேவதி தோட்டத்தில் பணி செய்துகொண்டுருந்தபோது, கட்டு விரியன் பாம்பு ஒன்று கடித்திருக்கிறது. இதையடுத்து ரேவதி, தன்னை கடித்த பாம்பை பிடித்து ஒரு பாட்டலில் அடைத்து மருத்துவமனைக்கு எடுத்துவந்துள்ளார்.
தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.