நெகமம்
நெகமத்தை அடுத்த வடசித்தூர் கடைவீதியில் உள்ள இந்திராணி என்பவரது மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு நெகமம் இன்ஸ்பெக்டர் சரவண பெருமாள் தலைமையிலான போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது 5 பாக்கெட் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்திராணியை போலீசார் கைது செய்தனர்.