வங்கிக்கு செல்வதாக கூறிச்சென்ற பெண் திடீர் மாயம்

உளுந்தூர்பேட்டை அருகே வங்கிக்கு செல்வதாக கூறிச்சென்ற பெண் திடீர் மாயம்

Update: 2022-10-08 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வாணியங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மனைவி சத்யா(வயது 34). இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள், 9 மற்றும் 7 வயதில் 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று உளுந்தூர்பேட்டையில் உள்ள வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற சத்யா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய தாய் லட்சுமி பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் சத்யாவை காணாததால் இதுகுறித்து திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சத்யாவை தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்