பெண் மர்மச்சாவு; போலீசார் விசாரணை

பரமத்திவேலூர் அருகே பெண் மர்மச்சாவு; இதுகுறித்து போலீசார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-01 18:53 GMT

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையன் (வயது 55). இவரது மனைவி யோகேஸ்வரி (47). இவர்களுக்கு குழந்தை இல்லை. இதில் மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்து வந்த சுப்பையன் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சுப்பையனின் மனைவி யோகேஸ்வரியும் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் யோகேஸ்வரி வெகுநேரமாகியும் வீட்டுக்குள் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது யோகேஸ்வரி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் யோகேஸ்வரியின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து யோகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்