ரூ.10 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த பெண்

ஏ.டி.எம். மையத்தில் கண்ெடடுத்த ரூ.10 ஆயிரத்தை பெண் ஒருவர் போலீசில் ஒப்படைத்தார்.

Update: 2023-08-05 16:24 GMT

குஜிலியம்பாறை அருகே உள்ள ரெட்டியபட்டியை சேர்ந்தவர் பரதன். அவருடைய மனைவி தவமணி (வயது 36). நேற்று காலை இவர், குஜிலியம்பாறை அருகே பாளையத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பணத்தை எடுத்தார். அதில் ரூ.10 ஆயிரம் இருந்தது. பணம் எடுக்க வந்த யாரோ ஒருவர் தவற விட்டு சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்துக்கு தவமணி தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த போலீஸ் ஏட்டு அருண்காந்தியிடம், அந்த பணத்தை தவமணி ஒப்படைத்தார். ஏ.டி.எம். மையத்தில் கண்ெடடுத்த பணத்தை போலீசில் ஒப்படைத்த தவமணியை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். இதற்கிடையே உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தைபெற்று செல்லலாம் என்று குஜிலியம்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்