கட்டிலில் இருந்து விழுந்த பெண் சாவு

ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கட்டிலில் இருந்து விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-12-06 18:45 GMT

ஆத்தூர்:-

ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி ஊராட்சி ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவர் உடல்நலக்குறைவால் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 10 நாட்களாக தங்கி இருந்து உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு உறுதுணையாக இவருடைய மனைவி தங்கம் (வயது 42) என்பவர் உடனிருந்து கவனித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கிருந்த கட்டிலில் தங்கம் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த தங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்