கட்டிலில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
கம்மாபுரம் அருகே கட்டிலில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
கம்மாபுரம்
கம்மாபுரம் அடுத்த சு.கீணனூரை சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி சித்ரா (வயது 62). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த கட்டிலில் தூங்கி கொண்டிருந்தபோது, தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.