தீக்காயமடைந்த பெண் சாவு

தீக்காயமடைந்த பெண் இறந்தார்.

Update: 2022-09-13 18:23 GMT

புதுக்கோட்டை காந்திநகர் முதலாவது தெருவை சேர்ந்த செந்திலின் மனைவி ரேணுகாதேவி (வயது 42). இவர் சம்பவத்தன்று வீட்டில் சமையல் செய்த போது மண்எண்ணெய் ஸ்டவ் அடுப்பில் இருந்து அவரது ஆடையில் தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய அவர் பலத்த தீக்காயமடைந்தார். சிகிச்சைக்காக அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் ரேணுகாதேவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்