தீக்காயம் அடைந்த பெண் சாவு

நெல்லையில் தீக்காயம் அடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-24 19:42 GMT

நெல்லை பாளையங்கோட்டை தாலுகா உத்தமபாண்டியபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி வள்ளி (வயது 56). இவர் கடந்த 22-ந்தேதி வீட்டில் சமையல் செய்யும் போது சேலையில் தீப்பிடித்து காயம் அடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் வள்ளி உயிர்இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்