தொழிலாளி மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி

தொழிலாளி மீது கொதிக்கும் எண்ணெயை மனைவி ஊற்றினார்.

Update: 2023-05-24 20:03 GMT

சேரன்மாதேவி:

தொழிலாளி மீது கொதிக்கும் எண்ணெயை மனைவி ஊற்றினார்.

கூலித்தொழிலாளி

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள தெற்கு வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (வயது 40). கூலித் தொழிலாளியான இவருக்கும் வீரவநல்லூர் வடக்கு ரத வீதியை சேர்ந்த அய்யம்மாள் (35) என்பவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மாதவன் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அய்யம்மாள் தற்போது அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

கொதிக்கும் எண்ணெய்

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மனைவி வீட்டுக்கு சென்ற மாதவன் வழக்கம் போல் தகராறு செய்து அங்கேயே தூங்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அய்யம்மாள் தூங்கிக் கொண்டிருந்த மாதவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த மாதவன் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்