வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் குறைந்தது
வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் குறைந்தது
அந்தியூர்
அந்தியூர் பர்கூர் மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 33.46 அடி ஆகும். அணையில் இருந்து பாசனத்துக்காக வாய்க்காலில் கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 26.21 அடியாக இருந்தது. அணையில் இருந்து வாய்க்காலில் வினாடிக்கு 21 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் மழை பெய்தது. மொத்தம் 8 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.