சோலையாறு அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்வு

வால்பாறையில் தொடர் மழையின் காரணமக சோலையாறு அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்துள்ளது.

Update: 2023-09-02 23:45 GMT


வால்பாறை


வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டவில்லை. இந்்த நிலையில் கடந்த சில நாட்களாக வால்பாறை பகுதியில் அவ்வப்போது மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் வால்பாறை பகுதியில் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. நேற்று தொடர்ந்து 5-வது நாளாக வால்பாறையில் மழை பெய்தது.

இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் குடைப்பிடித்தப்படி சென்றதை காணமுடிந்தது. தொடர் மழையின் காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று 104 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 488 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் இருமின்நிலையங்களும் இயக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.


நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- வால்பாறை- 34, கீழ்நீரார்- 48, சோலையாறு அணை-1, மேல்நீரார்-42.


Tags:    

மேலும் செய்திகள்