கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 164 கனஅடியில் இருந்து 532 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம்,
தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 164 கனஅடியில் இருந்து 532 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்இருப்பு 3,170 மில்லியன் கனஅடியாக உள்ளது.
தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.19 அடியாக உயர்ந்துள்ள நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 105 கனஅடியும் உபரிநீராக 25 கனஅடியும் திறக்கப்படுகிறது.
நீர்மட்டம் 23 அடியை தாண்டியதும் உபரிநீரை கூடுதலாக திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.