மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.45 அடியாக சரிவு
அணைக்கு வரும் நீரின்அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர்,
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 3,260 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 3,017 கன அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி ஆற்றிலும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீர் கால்வாயிலும் வெளியேற்றப்பட்டு வருகின்றன.
அணைக்கு வரும் நீரின்அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 116 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 115.45 அடியானது.