தொழிலாளி வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

தொழிலாளி வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

Update: 2022-09-16 19:00 GMT

வேம்பார்பட்டி ஊராட்சி கோபால்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 50). கூலித்தொழிலாளி. இவருடைய வீட்டின் மேற்கூரை ஓடுகளால் வேயப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பலத்த மழை பெய்தது.

அப்போது பழனிச்சாமி வீட்டின் முன்பக்க சுவர் திடீரென இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டு வீட்டின் படுக்கையறையில் தூங்கிக்கொண்டிருந்த பழனிச்சாமி மற்றும் குடும்பத்தினர் எழுந்து வந்து பார்த்த போது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததையறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறினர். சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வேம்பார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்பிரபு சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

---

Tags:    

மேலும் செய்திகள்