வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து முதியவர் சாவு

போளூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தின் போது வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து முதியவர் இறந்தார்.

Update: 2022-10-30 13:04 GMT

போளூர்

போளூர் அருகே மண்டகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைக்காரன் (வயது 75).

இவர் நேற்று மண்டகொளத்தூர் வடக்கு வீதியில் அண்ணாமலை என்பவர் வீட்டின் அருகே 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த பக்க கால்வாயை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது வீட்டு முன்புறம் இருந்த சுற்றுச்சுவர் திடீரென இடிந்து பிச்சைக்காரன் தலையில் விழுந்தது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மகன் குமார் போளூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்