சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
வாணியம்பாடி அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.
வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புராமன் மகன் ராம்குமார் (வயது 38), கட்டிட கூலி தொழிலாளி. இவர் நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென சுவற்றின் ஒரு பகுதி ராம்குமார் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.