சுவர் இடிந்து மூதாட்டி பலி
மணல்மேடு அருகே சுவர் இடிந்து மூதாட்டி பலியானார்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள நமச்சிவாயபுரம் காமராஜர் காலனியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி பஞ்சவர்ணம் (வயது 80). கோபால் ஏற்கனவே இறந்து விட்டார். பஞ்சவர்ணம் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக மணல்மேடு பகுதியில் பெய்த மழையின் காரணமாக இவரது வீட்டின் மண் சுவர் ஊறிப்போய் இருந்தது. இ்ந்தநிலையில் நேற்று காலை 6 மணியளளில் திடீரென சுவர் இடிந்து தூங்கிக் கொண்டிருந்த பஞ்சவர்ணம் மீது விழுந்தது. இதில், படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.