19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காது கேளாதோர் கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டம்

19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காது கேளாதோர் கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.

Update: 2022-07-01 16:36 GMT


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷாகுல்அமிது தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ், தலைவர் ஏசுபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். வாரிசு அடிப்படையில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமுல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழிபெயர்ப்பாளர் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சைகை மற்றும் விசில் ஓசையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். இதில் காதுகேளாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்