கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்:
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சங்கரன்கோவில் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் ராம்குமார் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் மாரியப்பன் கண்டன உரையாற்றினார். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திரளான கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.