கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடிக்க வேண்டும்

கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடிக்க வேண்டும்

Update: 2023-02-06 18:45 GMT

இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடிந்து விழும் நிலையில் கட்டிடம்

தலைஞாயி்்றை அடுத்த துளசாபுரம் ஊராட்சியில் மகாராஜபுரம் மேல்பாதி பகுதியில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் தான் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் சான்றிதழ்களை பெற்று வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. மேலும் கட்டிடத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், விவசாயிகள் உயிர்சேதம் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் உள்ளனர்.

இடிக்க வேண்டும்

இந்த கட்டிடத்தின் அருகில் சிறுவர்களுக்கான அங்கன்வாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த ஆபத்தான கட்டிடத்தின் அருகே சிறுவர்கள் விளையாடும் போது அசம்பாவிதம் ஏற்படுமோ? என்ற அச்சம் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்சேதம் ஏற்படும் முன்பு இடிந்து விழும் நிலையில் உள்ள துளசாபுரம் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்