காயம் அடைந்த முதியவர் பலி

கார் கதவு திறந்ததால் மோட்டார்சைக்கிள் மோதியதில் காயம் அடைந்த முதியவர் பலி

Update: 2022-12-14 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் மணி (வயது 60). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவேங்கடம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சோழபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தான் நிறுத்தி இருந்த கார் கதவை திறந்தார். இதில் கார் கதவு மீது மோதியதில் மணி காயமடைந்தார். அவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்