திருமங்கலம்,
திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் கல்லணை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 41). தொழிலாளி. இவர் கடந்த 13-ந் தேதி இரவு 9 மணி அளவில் எலியார்பக்தி நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்பொழுது சாலையைக் கடக்க முற்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மீது இருசக்கர வாகனம் மோதியது. இருசக்கர வாகனத்தில் வந்த பாலமுருகன் தலையில் அடிபட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.