குளம்போல் தேங்கிய தண்ணீரில் சிரமப்பட்டு சென்ற வாகனங்கள்

வேலூரில் பெய் மழையால் குளம்போல் தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் சிரமப்பட்டு சென்றன.

Update: 2023-09-20 18:29 GMT

வேலூரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றும் பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் பிற்பகல் 2 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்தது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. கொணவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் சர்வீஸ் சாலையில் தண்ணீர் குளம்போன்று தேங்கி நின்றது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றது. சிலர் தடுமாறி தண்ணீரில் கீழே விழுந்தனர். மழை பெய்யும்போதெல்லாம் தண்ணீர் தேங்குவதாகவும் இதனால் சாலையில் செல்லமுடியாத நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்