வாகனம் மோதி கொத்தனார் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கொத்தனார் பலியானார்.

Update: 2022-06-18 18:07 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, சீதேவிமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 46), கொத்தனார். இவர் ஊத்தாங்கரையை சேர்ந்த அன்பழகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் அருகே உள்ள அருமடல் ரோட்டிற்கு வேலை விஷயமாக வந்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் தீரன் நகர் அருகே சாலையோரத்தில் பாலகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அன்பழகனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீதும், பாலகிருஷ்ணன் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்