ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து..!

ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற பக்தர்களின் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2022-06-07 04:57 GMT

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயிலில் கடவுளை வழிபட பொள்ளாட்சியில் இருந்து வேனில் வந்துள்ளனர். இவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

அப்போது வேண் ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளி ரெயில்வே கேட் முன்பு சென்று கொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக வேனில் பயணம் செய்த அனைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்