கோலிசோடா ஏற்றி வந்த வேன் கவிழ்ந்தது

Update: 2023-04-29 19:52 GMT

சங்ககிரி:-

சங்ககிரி பகுதியில் இருந்து வேன் ஒன்று கோலிசோடா லோடு ஏற்றிக்கொண்டு வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தது. நேற்று மாலை 5 மணியளவில் அந்த பகுதியில் லேசான மழை பெய்தது. அப்போது முன்பு சென்ற வாகனத்தை அதன் டிரைவர் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க கோலி சோடா ஏற்றிச்சென்ற வேன் டிரைவரும் பிரேக் பிடித்தார். இதில் அந்த வேன் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் ெகாண்டு செல்லப்பட்ட கோலி சோடா பாட்டில்கள் உடைந்து சேதம் அடைந்தன. சில பாட்டில்கள் வெடித்து சிதறின.

இந்த விபத்து காரணமாக சுங்கச்சாவடி பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்