பத்தலப்பல்லி மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது

பேரணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி மலைப்பாதையில் லாரி கவிழந்தது.

Update: 2023-03-28 18:34 GMT

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் பகுதியில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு உருளைக்கிழங்கு லோடு ஏற்றிக் கொண்டு ஒரு லாரி நேற்றிரவு தமிழக எல்லையான பேரணாம்பட்டு பத்தலப்பல்லி மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென லாரியின் பிரேக் பிடிக்காததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. லாரி டிரைவர் முல்பாகலை சேர்ந்த எர்ரப்பாவின் (வயது 28) சமயோசித புத்தியால் இடதுபுறத்தில் சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழாமல் மலைப்பாதையின் வலதுப்புற சுவரில் மோதி ரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் எர்ரப்பா, முல்பாகலை சேர்ந்த உருளைக்கிழங்கு வியாபாரி கணேசன் (40) ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்