அனுமதி இல்லாமல் கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
கிணத்துக்கடவு அருகே அனுமதி இல்லாமல் கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள நெம்பர் 10 முத்தூர் கல்லுக்குழி அருகே கோவை புவியியல் மற்றும் சுரங்கத்துறை தேர்வு நிலை உதவியாளர் அய்யப்பன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் அந்த லாரியில் அனுமதி சீட்டு இல்லாமல் கல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.