2 பேரை பிளேடால் கிழித்த லாரி டிரைவர் கைது

முன்விரோத தகராறில் 2 பேரை பிளேடால் கிழித்த லாரி டிரைவர் கைது

Update: 2022-05-28 13:42 GMT

வாலாஜா

வாலாஜா நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 30), லாரி டிரைவர். இவர், அங்குள்ள பொது இடத்தை ஆக்கிரமித்து கழிவுநீர் தொட்டி கட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

இதை, அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான முத்தரசு என்பவரும், பொதுமக்களும் தட்டிக்கேட்டு வந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. முருகன் மீது அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலாஜா போலீசில் புகார் செய்தனர்.

அதேபோல் முருகனும் அப்பகுதி மக்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளார். இரு தரப்பு புகாரை பெற்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முத்தரசு தனது வீட்டில் உறவினர் கிஷோர் (35) என்பவருடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகன், முத்தரசுவிடம் தகராறு செய்துள்ளார்.

இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் முத்தரசு, கிஷோர் ஆகியோரை சரமாரியாக கிழித்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

அதில் படுகாயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் முருகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாலாஜா போலீஸ் நிலையத்துக்கு குவிந்தனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே, வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை தேடி வந்த நிலையில் இன்று வாலாஜா போலீசார் முருகனை கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்