கட்டிட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்

கட்டிட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்

Update: 2023-05-05 19:44 GMT

அம்மாப்பேட்டை ஒன்றியம் இடையிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்காக 15 அடி ஆழத்திற்கு பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் ஒருமாதத்திற்கு மேலாகியும் கட்டுமான பணி நடைபெறவில்லை. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் கட்டிட பணிக்காக தோண்டிய பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் மற்றும் கால்நடைகள் இந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிரிழிப்பு ஏற்படும் முன்பு பள்ளத்தை மூட வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்