மடத்துக்குளம் பகுதியில் ஒருசிலரின் அலட்சியத்தால் பாழாகி வரும் சாலையோர மரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மடத்துக்குளம் பகுதியில் ஒருசிலரின் அலட்சியத்தால் பாழாகி வரும் சாலையோர மரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-19 16:56 GMT

போடிப்பட்டி, அக்.20-

மடத்துக்குளம் பகுதியில் ஒருசிலரின் அலட்சியத்தால் பாழாகி வரும் சாலையோர மரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையோர மரங்கள்

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

மரம் என்பது மண்ணிலுள்ள உயிர்களுக்கு கிடைத்த வரம் என்று சொல்வார்கள். மரங்களின் நன்மையை கருத்தில் கொண்டு நம் முன்னோர்கள் மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள். சாலையோர மரங்கள் தரும் நன்மைகள் ஏராளமாக உள்ளன. பொதுவாக மரங்கள், தூசி மற்றும் மாசுபடுத்தும் சிறு துகள்களை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டுள்ளன. இதனால் வாகனங்களால் ஏற்படும் புழுதி மற்றும் காற்று மாசிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.மேலும் அதிகப்படியான இரைச்சலின் அளவை மட்டுப்படுத்தும் சக்தி மரங்களுக்கு உண்டு.இதன் காரணமாக சாலையோர மரங்களால் வாகனங்களின் இரைச்சல் ஒலி கட்டுப்படுத்தப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக நிழல் தருவதுடன், காற்றை குளிர்விக்கும் சக்தி கொண்டதாக இருப்பதால் அதிக வெப்பத்தால் உயிரினங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கிறது. மேலும் மண் அரிப்பைத் தடுத்தல், நிலத்தடி நீராதாரத்தை பாதுகாத்தல் என ஒவ்வொருவிதமான மரங்களுக்கும் ஒவ்வொரு தனித்துவமான குணங்கள் உள்ளது. இதுதவிர உண்ண கனிகள், பறவைகளுக்கு தங்க இருப்பிடம், மருந்துப் பொருட்கள், விறகு என ஏராளமான நன்மைகள் கொண்ட மரங்களை பாதுகாப்பதில் தொடர்ந்து அலட்சிய போக்கு நிலவி வருகிறது.மரம் வளர்ப்பு என்பதில் காட்டும் ஆர்வத்தை மரங்கள் பாதுகாப்பு என்ற வகையில் யாரும் காட்டுவதில்லை.அரசு மட்டுமல்லாமல் தன்னார்வலர்கள் பலரும் மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறார்கள்.

ஆனால் வளர்ந்து நிற்கும் மரங்களை பாதுகாப்பதில் யாருடைய கவனமும் இதுவரை திரும்பவில்லை என்பது வேதனையான உண்மையாகும்.இதனால் சாலையோரங்களில் வளர்ந்து நிற்கும் மரங்கள் பலவும் படிப்படியாக பாழாகி, காய்ந்து வீணாகி வருகின்றன.

காற்று மாசு

சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஒருசில பகுதிகளில் மரங்கள் அகற்றப்படுகின்றன.மேலும் கரையான்களின் தொடர் தாக்குதலால் பல மரங்கள் வலுவிழந்து வீணாகி வருகின்றன. இதுதவிர விளம்பரப் பலகைகளை ஆணி அடித்து தொங்க விடுவதாலும் மரங்களின் ஆயுள் குறைகிறது. பல இடங்களில் குப்பைகளை மரங்களின் அடியில் கொட்டுவதுடன் அவற்றுக்கு தீ வைக்கும் செயலிலும் சிலர் ஈடுபடுகின்றனர்.அந்த நெருப்பின் தாக்கத்தால் எரிந்தும், கருகியும் பல மரங்கள் வீணாகி வருகிறது.எனவே மரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாலையோர மரங்களை முழுமையாக கணக்கெடுத்து அனைத்துக்கும் எண்கள் இடவும், மரங்கள் பராமரிப்புக்கென தனி குழு அமைக்கவும் நடவடிக்கை அவசியமாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்